16 வயது சிறுவனால் நிகழ்ந்த களேபரம்
வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம் , சமிக்ஞை கம்பம், துவிச்சக்கரவண்டிகள் , பல கடைகள் மோதுண்டு பல சேதங்களும் ஏற்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பிரதான சந்தை வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு தெரியாமல் வாகனத்தை இயக்கிய சிறுவன்
விபத்துக்குள்ளான சிற்றூர்தி மரக்கறி பண்டங்களை சந்தைக்கு எடுத்து வருவது வழமை.இச்சமயம் சாரதி வேலைப்பளு காரணமாக சென்றிருந்த வேளை 16 வயதுடைய சிறுவன் குறித்த சிற்றூர்தியின் சாவியை திருடி வண்டியை இயக்கிச் சென்றதனால் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தின் போது மின்சார கம்பம், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான சமிக்ஞை கம்பம், கடைகளின் பொருட்கள், துவிச்சக்கரவண்டி என பலவற்றை மோதிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வருகிறது கிடுக்கிப்பிடி : கல்வி அமைச்சு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை
காவல் நிலையத்தில் சரண்
மேலும் விபத்தினை ஏற்படுத்திய 16 வயது சிறுவன் அருகில் இருந்த கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சாரதி தனக்கு தெரியாமல் சிறுவன் சாவியை எடுத்து திருட்டுத்தனமாக சிற்றூர்தியை எடுத்துச் சென்றிருப்பதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்