சிறையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர்!
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் பரவி வரும் வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், இவ்விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் உள்ள கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்திப்பதற்காக குறித்த உறுப்பினர் சென்றுள்ள நிலையில் அவர்கள் இவ்வாறு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வைரஸ் தொற்று
மேலும் கருத்து தெரிவித்த குறித்த உறுப்பினர், “கஸ்ஸப தேரர் மிகவும் சிரமத்துடன் நடப்பதாகவும், பேசும்போது கூட முன்பு போல் சுறுசுறுப்பாக இல்லை.

எந்தவொரு சிங்கள பௌத்தரின் இதயத்தையும் நொறுக்கும் அளவுக்கு தேரர் உள்ளிட்ட குழுவினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நான்கு தேரர்கள் மற்றும் சிறையில் உள்ள மற்ற குழுவின் உடல்நலத்திற்கு அரசாங்கம், சிறை அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |