மீண்டும் சத்தியா கிரகத்தில் இணைந்தார் கஸ்ஸப தேரர்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர், மீண்டும் விகாரமாதேவி பூங்காவில் இடம்பெறும் சத்தியாக்கிரகத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் நேற்று (17) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சுயவிருப்பின் போில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய தேரர்
விகாரமாதேவி பூங்காவில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றிரவு (17) கஸ்ஸப தேரர் அவசர சேவை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் சுயவிருப்பின் போில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய நிலையில் மீண்டும் விகாரமாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்படும் சத்தியாக்கிரகத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |