மட்டக்களப்பில் சுற்றி வளைக்கப்பட்ட பாரிய போதைபொருள் வர்த்தகர்!
மட்டக்களப்பில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (06-11-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 44 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் மட்டக்களப்பு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வை.விஜையராஜாவுக்கு இது தொடர்பில் இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதையடுத்து, மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் நேரடி வழி காட்டலில் சம்பவ தினமான நேற்று குறித்த நபரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது 10 கிராம் 500 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் போதை பொருள் தொடர்பாக பல முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகாலமாக இந்த போதைப்பொருள் வியாபாரத்தில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தொடர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |