என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம்: மோடிக்கு ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை
தன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது அவசியம் என அமெரிக்க ஜனாதிதி ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடிக்கு கடுமையான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு மேலதிக வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா செலவிடுவதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், அந்நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதித்ததுடன், பிற நாடுகளும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகம் ட்ரம்ப் விதித்த மேலதிக வரி
ட்ரம்ப்பின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் தொடர்ந்து எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் உள்பட மொத்தம் 50 சதவீத வரியை ட்ரம்ப் விதித்தார்.

ஆனால், ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் நாட்டின் நலன்கருதியே முடிவு எடுக்கப்படும், வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.
என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம்
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில் ரஷ்யாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப்,

“அடிப்படையில் அவர்கள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினார்கள். மோடி மிக அருமையான மனிதர். அவர் நல்லவர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பது முக்கியம் என்பதையும் அவர் அறிவார்.
அவர்கள் தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருகிறார்கள். நாங்கள் மிக விரைவாக வரியை உயர்த்த முடியும். அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |