நீதிமன்றத்தில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்த கெஹலிய
தரமற்ற தடுப்பூசி மோசடியின் விசாரணைகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தன்னை பிணையில் விடுவிக்க கோரி, கொழும்பு மேல் நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
தனது சட்டத்தரணிகள் ஊடாக இன்று (15) இந்த மனுவை சமர்ப்பித்துள்ள நிலையில் இந்த மனு மீதான விசாரணைகள் மார்ச் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிணை கோரி மனு
தரமற்ற தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரம்புக்வெல்லவை பிணையில் விடுவிக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (14) மறுத்துள்ளதுடன், வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தம்முடைய பிணைக் கோரிக்கையை நீதவான் நிராகரித்தமை சட்டத்திற்கு முரணானது என ரம்புக்வெல்ல தனது பிணை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் படி, தம்மை எந்த நிபந்தனையிலும் பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |