ஹிஷாலினியின் மரண விசாரணைகளைத் தடுக்கும் சமூக ஊடகங்கள்- அமைச்சர் குற்றச்சாட்டு!
death
social media
press meet
keheliya rambukwella
hishalini
By Kalaimathy
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் சிறுமியின் மரணம் தொடர்பான தகவல்கள் விசாரணைகளைத் தடுப்பதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை குறிப்பிட்டார்.
அத்துடன் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி