முன்னாள் அமைச்சர் கெஹலியவிற்கு எதிரான வழக்கு : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella) மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் (Colombo High Court) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க (Sujeeva Nishanka) முன்னிலையில் இன்று (03) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அதன்படி, இந்த வழக்கை ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் மாதம் 29ஆம் திகதி விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் தமது தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி கட்டணத்திற்காக செலுத்தப்பட வேண்டிய 240,000/- ரூபாயை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் நிதியை பயன்படுத்தி செலுத்தியமை ஊடாக அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption) இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |