இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட முக்கிய குற்றவாளிகள் : ஆரம்பமான விசாரணைகள்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட தரப்பினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட குறித்த குற்றவாளிகளில் கெஹெல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறே நிலங்க ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றவியல் விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஆழமான விசாரணைகள்
குறித்த குற்றவாளிகள் நேற்றிரவு 7.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதேவேளை, குறித்த குற்றவாளிகளிடம் ஆழமான விசாரணைகள் இடம்பெறுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இதற்குத் தேவையான பணிப்புரைகளை காவல்துறைமா அதிபர் வழங்கியுள்ளார்.
இவ்வாறான குற்றவாளிகள் நாட்டு மக்களைக் கஷ்டப்படுத்தி மேற்கொள்ளும் குற்றச் செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதியளிப்பதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
அதேநேரம், கடந்த 2 மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களைக் குறித்த குற்றவாளிகள் திட்டமிட்ட விதம் மற்றும் அதற்குப் பின்பாக இருந்த அரசியல் தலையீடுகள் தொடர்பிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
