கைது குறித்து கசிந்த தகவல் - கெஹெல்பத்தர பத்மேவின் அதிர வைக்கும் வாக்குமூலம்
அதிகாரி ஒலுகல இந்தோனேசியா வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தாங்கள் இருப்பிடத்தை மாற்றியதாகவும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை என கெஹெல்பத்தர பத்மே தெரிவித்துள்ளார்.
காவல்துறை துணை அத்தியட்சகர் ரோஹான் ஒலுகலவிடம் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகளை இந்தோனேசியாவில் கைது செய்ய மேற்கொள்ளப்பட்ட ரகசிய நடவடிக்கை குறித்த தகவல்களை சில காவல்துறை அதிகாரிகள் கசியவிட்டதாக புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியான நிலையில் கெஹெல்பத்தர பத்மே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாலைக் கூட பிடித்திருக்க முடியாது
அத்துடன், துருக்கிக்கு சென்று பதுங்கியிருக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்ததாக விசாரணைகளின் போது கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் சென்றிருந்தால் எங்களது வாலைக் கூட பிடித்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உலகில் இருபது நாடுகளில் தாம் தங்கியிருந்தாகவும் அவற்றில் இந்தோனேசியாவே மிகவும் பாதுகாப்பான நாடாக கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை விடவும் இந்த நாடு 29 மடங்கு பெரியது எனவும் பெரிய சனத்தொகையை கொண்ட நாடு எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் தம்மை கைது செய்வார்கள் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனவும் தமக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படப் போகின்றது என்பதை உணர்ந்ததாகவும் பத்மே இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நேருக்கு நேர் கண்டதும் அதிர்ச்சி
அதிகாரி ஒலுகல இந்தோனேசியா வந்துள்ளதாக தகவல் கிடைத்ததும் தாங்கள் இருப்பிடத்தை மாற்றியதாகவும் அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை எனவும் கெஹெல்பத்தர பத்மே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்டுநாயக்காவில் தரையிறங்கிய கெஹெல்பத்தர பத்மே, அண்மையில் தன்னால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட காவல்துறை அதிகாரியை நேருக்கு நேர் கண்டதும் அதிர்ச்சியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை அதிகாரியை பார்த்த கெஹெல்பத்தர பத்மேவும் அவரது கூட்டாளியான கமோண்டோ சலிந்தவும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த பாதாள உலகக் குழுவினரை தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
