அனைத்தையும் கக்கிய கெஹல்பத்தர பத்மே! வெளியான அதிர்ச்சிகர வாக்குமூலம்
தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள கெஹல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் அழைத்து வரப்பட்டு மேற்கு வடக்கு குற்றப்பிரிவால் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
அதன்போது, சந்தேகநபரான பத்மே கணேமுல்ல சஞ்சீவ மற்றும் பஸ் பொட்டா ஆகியோரின் கொலையைத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனைகள்
அத்தோடு, கம்பஹா ஒஸ்மானின் கொலை முயற்சி தொடர்பாக மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அவரிடம் விசாரித்துள்ளது.
அதற்கு பதிலளித்துள்ள கெஹல்பத்தர பத்மே, கம்பஹா ஒஸ்மானைக் கொல்ல வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும், தம்மிக அவிஷ்க மற்றும் கமாண்டோ சலிந்தவின் வேண்டுகோளின் பேரில் அதை வழிநடத்தியதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கோகோயின், ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து போதைப்பொருட்களையும் விற்றதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பத்மேவின் தொலைபேசி
இதற்கிடையில், துப்பாக்கிகள் தொடர்பான விசாரணையின் போது, இதுவரை தன்னிடம் இருந்த அனைத்து துப்பாக்கிகளையும் காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும், தன்னிடம் இன்னும் ஒரு துப்பாக்கி மட்டுமே இருப்பதாகவும் கெஹல்பத்தர பத்மே கூறியுள்ளார்.
அந்த துப்பாக்கியை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது தந்தை கொல்லப்பட்ட பிறகு பாதாள உலகத்திற்குச் சென்றதாகவும், ஆனால் விசாரணை அதிகாரிகள் அவரது தந்தை கொல்லப்படுவதற்கு முன்பு பஸ் சமி என்ற நபரைக் கொன்றதாகக் கூறியுள்ளார்.
மேலும், பத்மேவின் தொலைபேசியயை ஆய்வு செய்யும் போது பிரபலமான ஒரு பானத்தின் பெயரை குறியீடாகப் பயன்படுத்துவது குறித்தும் அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பியதையடுத்து, அந்த பானத்தின் பெயர் கோகோயினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
