இந்திய மருந்துகளை புறக்கணித்து சிங்கப்பூர் மருந்து கேட்கும் கெஹலிய
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தனது சுகயீனங்களுக்காக சிங்கப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மருந்துகளை கோரி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சுகாதார அமைச்சராக பதவி வகித்த போது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்த மறுத்து வருவதாக சங்கத்தின் தலைவர் டொக்டர் ருக்சான் பெல்லான தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு
சிறைச்சாலை வைத்தியசாலையின் வசதிகள் போதாது எனக்கூறி தனியார் வைத்தியசாலைக்கு தன்னை கொண்டு செல்லுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதவானின் உத்தரவு
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை இறக்குமதி செய்து மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகா கந்த நீதவான் அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அமைச்சர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |