கெஹெலிய ரம்புக்வெல்ல தொடர்பில் கம்மன்பிலவின் நிலைப்பாடு
கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது என ஜனாதிபதி தீர்மானித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஊழல் மோசடி
“முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து நா்ாளுமன்றத்தில் இருப்பவர்கள் அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தில் ஆளும் கட்சியினர் நடந்து கொண்டது பிழை எதிர்க்கட்சி நடந்துக்கொண்டது சரி என்று அதிபர் தீர்மானித்திருக்கின்றார்.
இங்கு நெருக்கடியாக இருக்கும் மிகப்பெரிய விடயம் ஊழல் மோசடியாகும். ஆகவே அமைச்சர் ரமேஸ் பத்திரண இந்த திருடர்களுடன் போராடி ஜெயிக்க வேண்டும்.” என்றும் கேட்டுக்கொண்டார்.