கெஹெலிய குடும்ப வழக்கு மீண்டும் விசாரணைக்கு
சந்தேகத்திற்கிடமான வங்கிக் கணக்குகளை வைத்திருந்ததன் மூலம் பணமோசடி சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(keheliya rambukwella), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் மற்றும் ஆறு குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவைசெப்டம்பர் 09 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (26) உத்தரவிட்டார்.
நேற்று குறித்த மனு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் எபா வீஹேன, மகள்கள் சந்துலா ரமாலி ரம்புக்வெல்ல, சாமித்ரி ஜனனிகா ரம்புக்வெல்ல, அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் மருமகன் இசுரு புலஸ்தி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பணமோசடிச் சட்டத்தின் பிரிவுகள் 4 மற்றும் 3 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்த சந்தேக நபர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட தலைமை நீதவான்,மனுவை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமா என்பது குறித்த ஆதாரங்களை செப்டம்பர் 09 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டு, விசாரணை விசாரணையை அதுவரை ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

