மறு அறிவித்தல் வரை வரை களனிப் பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!
களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாணவர்களும் நாளை (05.12.2023) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முன்னர் அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒழுக்காற்று நடவடிக்கை
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்றிரவு(3) உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் சென்று தாக்கப்பட்டுள்ளார் என்பதற்கிணங்க பல்கலைக்கழக நிர்வாகம் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளளது.
மேலும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[MYOV7BA[
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
