இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கை கிரிக்கெட் மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ள தடை விரைவில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த நாட்டில் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரிகளுடன் தொலைபேசியில் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக மேலும் குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை
தொடர்ந்தும் அவர் கூறியதாவது, “நான் ஐசிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன், அதில் அவர்கள் எங்கள் தடையை விரைவில் நீக்குவோம் என்று கூறினார்கள்.
ஷம்மி சில்வா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சர்வதேச கிரிக்கெட் பேரவையில் முன்வைக்கப்படும்” என்றார்.
மேலும், தேசிய விளையாட்டு சபைக்கு 15 புதிய உறுப்பினர்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த குழுவிற்கு தலைவராக டாக்டர் மையா குணசேகர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.