ஐயப்ப பக்தருக்கு ஏற்பட்ட நிலை -அமைச்சரின் செயலால் குவியும் பாராட்டுகள்
இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய தொடங்குவார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் திகதி, மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் பலரும் சபரிமலை கோவிலுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
சபரிமலைக்கு சாமி தரிசனம்
இவ்வாறு சென்ற ஐயப்ப பக்தர் ஒருவர் கால் வலியால் மலையேற முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அவரை பார்த்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர் இராதாகிருஷ்ணன் காரில் இருந்து உடனடியாக இறங்கி கால் வலியால் அவதிப்பட்ட அந்த பக்தரிடம் என்னவென்று விசாரித்திருக்கிறார்.
கால் வலியால் அவதிப்பட்ட பக்தர்
அப்போது பக்தருக்கு தசை பிடிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அமைச்சர் பக்தரின் காலை பிடித்து நீவி விட்டு மசாஜ் செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதனை போட்டோ எடுத்திருக்கின்றனர்.
அமைச்சர் ஒருவர் இப்படி ஐயப்ப பக்தருக்கு காலை நீவி விட்ட மனிதநேயமிக்க இந்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் பாராட்டையும் குவித்து வருகிறது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா
