நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைப்பு - கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன!
ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கேரளாவைச் சேர்ந்த தாதியர் நிமிஷா பிரியாவின் (Nimisha Priya) மரணதண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது முன்னாள் தொழில் கூட்டாளியுமான தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு கொலை செய்ததற்காக நிமிஷா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
மரண தண்டனை
ஜூலை 16 ஆம் திகதி (நாளை) அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அவரைக் காப்பாற்ற தீவிர இராஜதந்திர மற்றும் மனிதாபிமான முயற்சிகள் நடந்து வருகின்றன.
தற்போது தலைநகர் சனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிமிஷாவின் வழக்கு, ஏமனில் இந்தியாவின் இராஜதந்திர பிரசன்னம் இல்லாததாலும், ஆளும் அதிகாரிகளை அங்கீகரிக்காததாலும் மேலும் சிக்கலாகியுள்ளது.
இதனிடையே, கேரள தாதியரை காப்பாற்ற முடிந்த அனைத்தையும் செய்துள்ளதாக மத்திய அரசு திங்களன்று (14) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரள மாநில மதகுரு, ஏமன் நாட்டின் மதகுருவிடம் இது தொடர்பாக பேசினார். இந்த நிலையில் நாளை நிறைவேற்றப்பட இருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

