மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரத்தின் முக்கிய சாட்சி: விசாரணை வளையத்திற்குள் கோட்டாபய
மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய இராணுவ சாட்சி மற்றும் அரசியல் தரப்பினர் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தற்போது வெளியாக ஆரம்பித்துள்ளன.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகளால் காவல்துறையில் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, குறித்த கிணறுகளை அகழ்ந்து ஆய்வு செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில், சில முக்கிய சாட்சிகள் தொடர்பான விடயங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
டென்சில் கொப்பேகடுவவின் கட்டுப்பாட்டின் கீழ் மண்டைதீவுப் பிரதேசங்கள் இருந்த காலப்பகுதியில், அங்கு இராணுவ அதிகாரியாகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்ச அவர்களே தற்போது உயிருடன் இருக்கும் முக்கிய இராணுவ சாட்சியாகக் கருதப்படுவதாக முக்கிய விடயம் ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தால் பல மர்மங்கள் வெளிச்சத்திற்கு வரும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது தரப்பினர் மண்டைதீவுப் பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கடத்தல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்கள் மற்றும் ஆதாரபூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பின்னணியில், ஐ.பி.சி தமிழின் 'உண்மைகள் பேசட்டும்' நிகழ்ச்சி இது குறித்த பல ஆதாரபூர்வமான விடயங்களைத் தொடரும் காணொளியில் விரிவாக ஆராய்ந்துள்ளது...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |