ஈரான் ஆன்மிக தலைவருக்காக விண்ணதிர முழங்கிய மக்கள்
இஸ்ரேலுடனான(israel) 12நாள் போருக்கு பின்னர் முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய(iran) அரசு தலைவர் அயதுல்லா அலி கமேனி முதன்முறையாக தோன்றினார்.
இதன்போது ஈரானிய மக்கள் உணர்ச்சிவசப்பட்டு எங்கள் தலைவருக்காகவே நரம்புகளில் இரத்தம் பாய்கிறநது என விண்ணதிர கோஷம் எழுப்பினர். இந்த காணொளி எக்ஸ் தளத்தில் வைரலாகியுள்ளது.
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-திகதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
விண்ணதிர கோஷம்
இதனையடுத்து 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - ஈரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
📹 لحظه ورود رهبر انقلاب به حسینیه امام خمینی(ره) در مراسم عزاداری شب عاشورای حسینی#عاشورا pic.twitter.com/09mfwm3qFM
— خبرگزاری تسنیم 🇮🇷 (@Tasnimnews_Fa) July 5, 2025
இஸ்ரேல் உடனான போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் அயதுல்லா கமேனி தோன்றியுள்ளார். அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் இரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
