கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு

Sri Lanka Police Ampara Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jan 13, 2025 08:18 AM GMT
Report

புதிய இணைப்பு

கண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் (Ampara) வைத்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி கண்டி (Kandy) - தவுலகல பகுதியில் வைத்து வேன் ஒன்றில் வந்த மர்ம கும்பல் ஒன்று காம்பொல - மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா ஹமீரா என்ற பாடசாலை மாணவியை கடத்திச் சென்றிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு | Kidnapped Schoolgirl Found In Ampara

இதன்போது, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் கடந்த 11 ஆம் திகதி கண்டுபிடக்கப்பட்டதுடன், மறுநாள் அதாவது 12ஆம் திகதி கம்பளை பகுதியில் வைத்து, குறித்த வாகனத்தின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை (13.01.2025) அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறித்த சந்தேக நபர் ஜப்பானில் பணிபுரிந்ததாகவும், மாமாவிடம் தனது பணம் கொடுக்கப்பட்டதாகவும், பணத்தை தராததால் தான் இதுபோன்ற நடவடிக்கை எடுத்து 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

இத தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.  

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா வைத்தியசாலையில்

மரண தண்டனை கைதி துமிந்த சில்வா வைத்தியசாலையில்

முதலாம் இணைப்பு

கண்டி (Kandy) -  தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் (Ampara) வைத்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை வேனில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடந்த  11ஆம் திகதி கடத்திச் சென்றிருந்தது.

இந்த நிலையில் நேற்றையதினம் (12) இது தொடர்பான சீசீடிவி காட்சிகள் வெளியான நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சாதனை - மூளைக் கட்டியை கண்டறிய புதிய இயந்திரம்

யாழ். பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சாதனை - மூளைக் கட்டியை கண்டறிய புதிய இயந்திரம்

மேலதிக விசாரணை

இதன் போது, கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய வேன் நேற்றுமுன் தினம் (11.01.2025) பொலன்னறுவை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலன்னறுவை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு | Kidnapped Schoolgirl Found In Ampara

அதன்படி, நேற்று  (12.01.2025) கம்பளை பகுதியில் வைத்து, குறித்த  வாகனத்தின் சாரதி தவுலகல காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று (13.01.2025) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் ‌தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் மீட்பு | Kidnapped Schoolgirl Found In Ampara

நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் தாயின் தம்பியான தனது மாமாவின் மகளையே இவ்வாறு அழைத்து வந்ததாக குறித்த கடத்தலை நடத்திய இளைஞன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: வெளியான பின்னணி

பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: வெளியான பின்னணி

தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு : தொடரும் காவல்துறை விசாரணை

தென்னிலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூடு : தொடரும் காவல்துறை விசாரணை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023