யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணத்தில் இளைஞனொருவன் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு கடுமையான தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த சனிக்கிழமை (23) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன் வீதியில் சென்றவேளை மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரை கடத்தி ஆள் அரவமற்ற பகுதிக்கு கொண்டு சென்று கடுமையாக தாக்கி அவரிடமிருந்த தொலைபேசி, மணிக்கூடு என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு
தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறையிட்டதை அடுத்து துரித கதியில் செயற்பட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்