சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது
மொனராகலை, எத்திமலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கொடியாகலயை வசிப்பிடமாகக் கொண்ட 11 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ சிப்பாய் உள்ளிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாவலர்களிடம் இருந்து கடத்திச் சென்று, இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், செவ்வாய்க்கிழமை (27) இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ சிப்பாய் துஷ்பிரயோகம்
அவர்களிடமும், சிறுமியிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அச்சிறுமி, இராணுவ சிப்பாயினால், ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட
சந்தேகநபர்கள்
அனைவரையும்
சியம்பலாண்டுவ
நீதவான் நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்துவதற்கு
நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன என
தெரிவித்த எத்திமலை
காவல்துறையினர், வைத்திய
பரிசோதனைகளுக்காக
மொனராகலை மாவட்ட
வைத்தியசாலையில் சிறுமி
அனுமதிக்கப்பட்டுள்ளார்
என்றனர்.