கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு

Tamils Sri Lanka Ramalingam Chandrasekar
By Kajinthan Dec 16, 2025 10:30 PM GMT
Report

கடற்றொழிலாளர்களை தூண்டிவிட்டு யாழ். இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு கடற்றொழில் அமைச்சர் வற்புறுத்தியதாக ரெலோ கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய இழுவைப் படகுகளுக்கு எதிராக யாழில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்காலத்தில் 5000 பேரை திரட்டி போராட்டம் நடாத்தி யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை இல்லாது செய்வோம் என்றும் அமெரிக்கா மற்றும் சீன தூதரகத்தை யாழில் அமைப்போம் என்றும் கடற்றொழிலாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

கடற்றொழிலாளர்கள் 

அந்த ஒரு கடற்றொழிலாளர் தெரிவித்த கருத்தானது இன்று ஒட்டுமொத்தமான கடற்றொழிலாளர்களுக்கும் மாத்திரமல்ல குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்குரிய இராஜதந்திர நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

இது பாரிய வேதனைக்குரிய விடயம் மாத்திரம் அல்ல அவலங்களை சுமந்திருக்கின்ற எங்களுடைய தமிழ் மக்களை மீண்டும் ஒரு அவலத்திற்குள் தள்ள கூடிய செயற்படாகத்தான் அமைந்திருக்கின்றது.

கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு | Sri Lanka Minister Accused Of Inciting Protest

இந்தக் கருத்துக்கு பின்னால் ஆளும் தரப்பு இருக்கின்றது என்ற விடயம் தெட்டத்தெளிவாக தெரிகின்றது.

போராட்டத்தை நடத்திய கடற்றொழிலாளர்கள் நேற்றையதினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தி இருந்த நிலையில் அதில் ஒரு விடயத்தை வெளிப்படையாக தெரிவித்து இருந்தனர்.

பிரான்ஸின் புதிய குடியுரிமைச் சட்டம்...! புலம்பெயர்ந்தோருக்கு கடும் சிக்கல்

பிரான்ஸின் புதிய குடியுரிமைச் சட்டம்...! புலம்பெயர்ந்தோருக்கு கடும் சிக்கல்

அத்துமீறல்கள் 

தற்போது இருக்கின்ற கடற்தொழில் அமைச்சர் தான் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுங்கள் என வற்புறுத்துவதாக கடற்றொழிலாளர்கள் நேற்றைய ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இந்த விடயத்தை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருக்கின்ற எமது இனத்தை மீண்டும் இராஜதந்திர ரீதியில் நெருக்கடிகளுக்கு உள்ளாக்க கூடாது.

கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு | Sri Lanka Minister Accused Of Inciting Protest

ஜனாதிபதி ஒரு நல்ல தீர்வு தருவார் என மக்கள் நம்புகின்றார்கள் அத்தோடு அவர்கள் இவ்வாறு நம்பிக்கொண்டு இருக்கையில் ஆளும் தரப்பின் அமைச்சர ஒருவர் இவ்வாறு மக்களை வழிநடத்துவது என்பது என்னை பொறுத்தவரையில் ஒரு பாரிய தவறாகும்.

அதுமட்டுமல்ல இது ஒட்டுமொத்த நாட்டுக்குமே பிரச்சினை அத்தோடு இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொழில் முதல்களை இழப்பதுடன் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளும் தள்ளப்படுகின்றனர்.

பிபிசி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை: ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை

பிபிசி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை: ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை

பேச்சுவார்த்தை 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் மீண்டும் இவ்வாறு அவலத்திற்கு உள்ளாகின்றனர்.

இந்த இழுவைமடி மீன்பிடி முறையானது இந்தியாவிலேயே தடை செய்யப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடாத்தி இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டுமே தவிர பாதிக்கப்பட்ட இனத்தை தூண்டி மீண்டும் அவர்களை பிரச்சினைகளுக்குள் தள்ளி விடுவது ஆபத்தான விடயமாகும்.

கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடும் குற்றச்சாட்டு | Sri Lanka Minister Accused Of Inciting Protest

ஏனெனில் பேரிடர் ஒன்று ஏற்பட்டபோது எமக்கு உடனடியாக கை கொடுத்தது பாரத தேசம்.

கடந்த காலத்தில் கோட்டாபயவின் ஆட்சியில் எமது நாடு வீழ்ச்சி அடைந்தபோது கூட அதை மீட்பதற்கு பாரத தேசமே உதவி புரிந்தது.

எதிர்காலத்திலும் எமது தேசத்தை காட்டியெழுப்ப இந்திய தேசம் கரம் கொடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை...!

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025