சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் எழுந்த சர்ச்சை - மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரச்சினை தொடர்பாக வெஸ்டர்ன் வைத்தியசாலை சமர்ப்பித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (16) சோபித ராஜகருணா மற்றும் திரு தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை இடைநிறுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தமக்கு வழங்கிய கடிதத்தை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுவை பொரளை வெஸ்டர்ன் வைத்தியசாலை தாக்கல் செய்திருந்தது.
அறுவை சிகிச்சை
மேலும், அந்த வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படவுள்ள இரண்டு நோயாளிகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.