சிறுநீரக கடத்தலின் பிரதான முகவருக்கு அரசு வழங்கிய அதிரடி உத்தரவு!
புதிய இணைப்பு
சிறுநீரக கடத்தல் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட மொஹமட் பசீர் மொஹமட் ரஜாப்தீன் என்ற நபர் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன், இது தொடர்பான சிறுநீரக கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படும் பொரளை தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் 6 பேருக்கும் வெளிநாட்டு பயணத்தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய பிரதான தரகர் 41 வயதான மொஹமட் பசீர் மொஹமட் ரஜாப்தீன் என்ற நபர் இன்று (06) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட பிரதான தரகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (05) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி காஜிமாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடை வியாபாரி
சந்தேக நபரான மொஹமட் பசீர் மொஹமட் ரஜப்தீன் என்பவர் ஆடை வியாபாரியாக பணியாற்றி வந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் சிறுநீரக விற்பனை மோசடியில் பிரதான தரகராக செயற்பட்டு சிறுநீரகங்களை வழங்கியவர்களை ஒருங்கிணைத்துள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (06) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா
