கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு
Kilinochchi
By Independent Writer
தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிளும் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன்படி காற்றுடன் கூடிய அதிக மழை பெய்து வருவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் தற்பொழுது நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக இன்று 28.11.2025 காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.

மற்றும் கனகாம்பிகை குலமும் தற்பொழுது வான் பாய்ந்த வண்ணம் உள்ளது கல்மடு குளம் தனது கொள்ளளவை எட்டி வான் பாய ஆரம்பித்துள்ளது.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு குளத்தின் நீரேந்தும் பகுதிகள் வாழும் மக்கள் மிகுந்த அவதாரத்துடன் செயல்படுமாறும் தமது பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தி - எரிமலை
கண்டாவளை பிரதேச செயலர்பிரிவு


விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்