இந்திய மீனவர்களின் அத்துமீறல்- வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கும் இரணைதீவு மீனவர்கள்!
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இரணைதீவு மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமது உடமைகளை விற்று மீன்பிடி தொழிலுக்கான பொருட்களை கொள்வனவு செய்கின்ற போதிலும் இந்திய மீனவர்களின் படகுகளினால் அவை சேதமாக்கப்படுவதாக இரணைதீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கிளிநொச்சி இரணைதீவு மக்கள் தமது வாழ்வாதார தொழிலாக மீன்பிடித்தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.
தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியினால் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்படுவதாக இரணைதீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது மீன்பிடித்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் வலைகள், இரும்புக் கம்பிகள் என இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளினால் சேதமாக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே உடனடியாக தமது பிரச்சனைகளை கருத்தில் கொண்டு எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் வருகையினை நிறுத்துமாறு இரணைதீவு மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.