கிளிநொச்சி - கனகபுரம் துயிலும் இல்லம்: இளைஞர்களின் பசுமை செயற்திட்டம்
தாய் நிலத்தின் செழுமையை வளப்படுத்துவதில் தனி நபர்களும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.
யுத்தத்தின் பின்னர் மாற்றங்களை நோக்கி பயணிக்க விரும்பும் இளைஞர்கள் வன்னித்தமிழ் மக்கள் என்ற அமைப்பின் ஊடாக பசுமையை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
வீதிகள் தோறும் மரங்களை நாட்டி, பிரதேசம் முழுவதையும் பசுமை என்னும் கூடாரத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சியை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், ஏ9 பெருந்தெரு மற்றும் ஏனைய பெருந்தெருக்கள், சிறு வீதிகளை உள்ளடக்கி செயற்படுத்தப்படும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை அண்மித்து காணப்படும் வீதிகளை பசுமையாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.
பசுமையின் நகர்ச்சி பற்றிய விடயங்களை விபரிக்கின்றது கீழுள்ள காணொளி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 10 மணி நேரம் முன்
