ஈரானின் தற்காலிக தலைமைத்துவக் குழு...! நியமிக்கப்பட்டுள்ள முக்கியஸ்தர்
United States of America
Israel
Iran
Middle East
World
By Shalini Balachandran
ஈரானின் கார்டியன் கவுன்சில் மதத் தலைவர் அலிரேசா அராஃபி, அந்நாட்டின் தற்காலிக தலைமைத்துவக் குழுவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை நாட்டின் உயர்மட்ட அதிகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் ஜனாதிபதி பெஷேஷ்கியன் மற்றும் தலைமை நீதிபதி மொஹ்சேனி-எஜீ ஆகியோருடன் இணைந்து அராஃபி செயலாற்றுவார்.
அரசியல் ஸ்திரத்தன்மை
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைப் பேணுவதே இந்த தற்காலிகக் குழுவின் முதன்மை நோக்கமாகும்.

இந்த நியமனம் ஈரானின் மத மற்றும் அரசியல் அதிகாரப் படிநிலையில் மிக முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |