றீச்ஷாவின் 2026ஆம் ஆண்டிற்கான மரதன் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டுங்கள்!

Kilinochchi Reecha Sports
By Shalini Balachandran Mar 01, 2026 01:31 PM GMT
Report

கிளிநொச்சி - இயக்கச்சியில் உள்ள றீச்ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணை மாபெரும் மாரத்தான் ஓட்டப் போட்டியை நடத்தவுள்ளது.

குறித்த போட்டி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இளம் வீரர், வீராங்கனைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்குபற்றுபவர்களுக்குப் பெறுமதியான பணப்பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை

பலியான கமேனியும் படைத்தலைகளும்...! துல்லிய உளவுக்கு ஈரானின் பெரும் விலை

ஓட்டப் போட்டி

இப்போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எனத் தனித்தனியாக இரு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கான 15 கிலோமீட்டர் ஓட்டப் போட்டி பளை நகரில் இருந்தும், பெண்களுக்கான 10 கிலோமீட்டர் ஓட்டப் போட்டி புதுக்காடு சந்திப்பில் இருந்தும் ஆரம்பமாகி 'றீச்ஷா' பண்ணை வரை நடைபெறும்.

வெற்றிபெறுபவர்களுக்கு முதலாம் பரிசாக ரூபா 50,000, இரண்டாம் பரிசாக ரூபா 25,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபா 10,000 வழங்கப்படவுள்ளதுடன், 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

ஈரானில் அதிகார மாற்றம் : இடைக்காலத் தலைமைச் சபை பொறுப்பேற்பு

ஈரானில் அதிகார மாற்றம் : இடைக்காலத் தலைமைச் சபை பொறுப்பேற்பு

மேலதிக விபரங்கள்

பங்குபற்றுபவர்கள் மூன்று மாதங்களுக்குட்பட்ட மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

எனினும், இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் இப்போட்டியில் பங்கேற்க முடியாது.

Gallery

ஆர்வமுள்ளவர்கள் ReeCha App ஊடாக ரூபா 500 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திப் பதிவு செய்துகொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு 077 666 4194 அல்லது 077 666 5022 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அடுத்த இலக்குகள்: அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

ஈரானின் அடுத்த இலக்குகள்: அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016