கொல்லப்பட்ட அலி கமேனி : அமெரிக்காவிற்கு எதிராக வெடித்த போராட்டம்

United States of America Pakistan Iran Iraq Ayatollah Ali Khamenei
By Sathangani Mar 01, 2026 10:46 AM GMT
Report

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பாகிஸ்தானின் கராச்சி நகர் மற்றும் ஈராக்கின் பக்தாத் நகர்களில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது சிலர் அமெரிக்க தூதரகத்தை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

கமேனியை பின்தொடர்ந்த மரணம்! வெளிவந்தது இஸ்ரேலின் துல்லிய தாக்குதல் பின்னணி

8 பேர் உயிரிழப்பு 

கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் தூதரக வளாகத்திற்குள் புகுந்தவர்கள் அங்கிருந்த பொருட்களுக்கும் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொல்லப்பட்ட அலி கமேனி : அமெரிக்காவிற்கு எதிராக வெடித்த போராட்டம் | Protesters Besieged Us Embassies In Pakistan Iraq

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் அதிகார மாற்றம் : இடைக்காலத் தலைமைச் சபை பொறுப்பேற்பு

ஈரானில் அதிகார மாற்றம் : இடைக்காலத் தலைமைச் சபை பொறுப்பேற்பு

 கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

இதேவேளை அமெரிக்காவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஈராக் தலைநகர் பக்தாத்தில் உள்ள அதீத பாதுகாப்புமிக்க 'பசுமை வலயத்திற்குள்'  நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம் மற்றும் முக்கிய அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாகக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

கொல்லப்பட்ட அலி கமேனி : அமெரிக்காவிற்கு எதிராக வெடித்த போராட்டம் | Protesters Besieged Us Embassies In Pakistan Iraq

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரப் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அந்தப் பகுதியில் மேலதிக பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு மரண அடி கொடுப்போம் : ஈரான் சபாநாயகர் எச்சரிக்கை




செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016