பகையுணர்வு மிகுதியால் தீயிட்டு எரிக்கப்பட்ட வீடு!
கண்டாவளை பிரதேச செயளர் பிரிவுக்குட்ப்பட்ட தருமபுரம் பகுதியில் வீடு ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராரு முற்றியதால் முற்பகை காரணமாகவே வீட்டிற்கு தீ பற்றவைத்து விட்டு அருகிலிருந்த தண்ணீர் தாங்கியையும் கொத்தி சேதப்படுத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளார் .
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் கிராமசேவகர் எரிந்த வீட்டினை பாரவையிட்டதுடன் வீட்டுக்கு தீவைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவரும் பொலிஸாரல் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


