அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் - கையை இழந்த சிறுவன்!

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Accident Death
By Kalaimathy Dec 24, 2022 07:14 AM GMT
Report

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன் கிழமை மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 6 வயது சிறுவன் ஒருவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து, வீதியில் பந்தயத்திற்கு ஓடிய போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.

உயிரிழப்பு

அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் - கையை இழந்த சிறுவன்! | Kilinochchi Palai Bus Accident Death Jaffna Trinco

இந்த விபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பணியாற்றும் அரச ஊழியரான யாழ்.சாவகச்சோி  அரசடியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி வயது 32 என்பவர் உயிரிழந்ததுடன் 17 பேர் காயமடைந்தனர்.

அதன் போது  படுகாயமடைந்த ரொட்மன் ரொணிக் ரொபின் வயது 6 என்ற சிறுவனின் இரு கைகளும் காயமடைந்த நிலையில், தற்போது ஒரு கை அகற்றப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்தனர்.

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தே விபத்துக்குள்ளாகியது.

காவல்துறை விசாரணை 

அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் - கையை இழந்த சிறுவன்! | Kilinochchi Palai Bus Accident Death Jaffna Trinco

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதன்போது இரு சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்தனர்.

சிறுவனின் கை அகற்றல்

அரச பேருந்து சாரதியின் பந்தய ஓட்டத்தால் ஏற்பட்ட விபரீதம் - கையை இழந்த சிறுவன்! | Kilinochchi Palai Bus Accident Death Jaffna Trinco

காயமடைந்தவர்களில் 11 பேர் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் 5 பேர் பளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015