தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும்: சிறீதரன்
18 இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் உள்ள நிலையில் சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan)தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி (Kilinochchi) - நாதன் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று (28) பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே குறித்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
காலத்திற்கு காலம் சிறிலங்கா அதிபர் தேர்தலில் பல வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய போதும் சிலர் வெற்றி பெற்றார்கள்.எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் கொள்கைக்கு சிறிலங்கா அதிபர்த் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய காலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 2 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்