கிளிநொச்சியில் பெய்த மழையால் பலத்த சேதம்!
Kilinochchi
rain
By Thavathevan
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் வீடுகள் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
இன்று பிற்பகல் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக செல்வா நகர் மற்றும் கிருஷ்ணபுரம் பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
தற்போதைய நிலவரத்தின்படி செல்வா நகர் பிரதேசத்தில் மூன்று வீடுகளும், கிருஷ்ணபுரம் பிரதேசத்தில் ஐந்து வீடுகள் மற்றும் முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் விழுந்ததில் முச்சக்கர வண்டி பலத்த சேதம் அடைந்துள்ளது.
வீதிகளில் இருந்த பாரிய மரங்கள் விழுந்தமையால் வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி