கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தை செலுத்தி பெண்கள் தின நிகழ்வை சிறப்பித்த பெண்கள்
கிளிநொச்சியில் பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த மகளீர் தின நிகழ்வை கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் குமரபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரம்
உழவு இயந்திர சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளவுள்ள 8 பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி நிகழ்வில் பெறுமதி சேர்த்தனர்.
குறித்த பெண்களிற்கு ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட
விருந்தினர்கள் கைலாகு கொடுத்து உற்சாகப்படுத்தினர்.
பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து குறித்த பெண்கள் உழவு இயந்திரத்தை செலுத்தி விழா மண்டபம் வரை சென்றதை தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் ஆரம்பமானது.
நிகழ்வில், ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |