புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் - காட்டுப்பகுதியில் திடீர் முற்றுகை!
CID - Sri Lanka Police
Sri Lanka Army
Kilinochchi
By Kalaimathy
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினர் நேற்று(28) இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து குறித்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை

இதன்போது காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 40 கிலோ மதிக்கத்தக்க 20 பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பில்விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி