தொடரூந்து பாதையில் வீழ்ந்து குடும்பஸ்தர் தற்கொலை
accident
train
vavuniya
killed
By Vanan
வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் தொடரூந்து பாதையில் வீழ்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
இன்று மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடரூந்து வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, நபர் ஒருவர் தொடரூந்து பாதையில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவத்தில் வவுனியா தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா ரவி என்ற 55 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
அவரது உடமையில் இருந்து கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டதுடன், குடும்ப விவகாரமே இந்தத் தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்