கிம் ஜாங் உன்னின் அதீத சர்வாதிகார போக்கு - அமைச்சருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை!

Death Penalty North Korea Kim Jong Un
By Kalaimathy Jan 07, 2023 05:28 AM GMT
Report

வடகொரியாவின் அமைச்சர் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மரணதண்டனைக்குள்ளான அமைச்சர், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டிலேயே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வட கொரிய அமைச்சர் ரி யோங் ஹோ, ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றிய போது, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை “பொய் ராஜா” என்றும் “அதிபர் ஈவில்” என்றும் குறிப்பிட்டிருந்தார். 

வட கொரியாவின் சர்வாதிகாரி

கிம் ஜாங் உன்னின் அதீத சர்வாதிகார போக்கு - அமைச்சருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை! | Kim Jong Un Executes North Korean Minister

இதன் காரணமாகவே வடகொரியாவின் சர்வாதிகாரியாக செயற்படும் அதிபர் கிம் ஜாங் உன் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், ரி யோங்-யின் வெளிப்படையான மரண தண்டனையை வட கொரியாவின் நீண்ட தூர பொலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தின் பாரிய விரிவாக்கத்துடன் இணைத்துள்ளது என ஜப்பான் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அதேவேளை தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் யூன் குன்-யங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆட்சியால் ரி யோங் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை அந்நாட்டின் தேசிய புலனாய்வு சேவை (என்ஐஎஸ்) உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சராக நியமனம்

கிம் ஜாங் உன்னின் அதீத சர்வாதிகார போக்கு - அமைச்சருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை! | Kim Jong Un Executes North Korean Minister

ஆனால் அமைச்சர் தூக்கிலிடப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனைக்குள்ளான அமைச்சர், கடந்த 2003 முதல் 2007 வரை மேற்கு லண்டனின் ஈலிங்கில் உள்ள வட கொரியாவின் பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றினார். அதன்பின் 2016ம் ஆண்டு வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் இடையே சிங்கப்பூரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ரி யோங் முக்கிய பங்காற்றினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத பேச்சுவார்த்தை

கிம் ஜாங் உன்னின் அதீத சர்வாதிகார போக்கு - அமைச்சருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை! | Kim Jong Un Executes North Korean Minister

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் தொடர்பில் இருந்து ரி யோங் விலகி காணப்பட்ட நிலையில், அணு ஆயுதங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்திய ரி யோங் ஹோ-வுக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மரணத் தண்டனையை நிறைவேற்றி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.


 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி