கிளப் வசந்த கொலை விவகாரம்: நீதிமன்றில் வழங்கப்பட்ட இரகசிய வாக்குமூலம்
கிளப் வசந்தவின் கொலை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பச்சை குத்தும் நிறுவனத்தின் உரிமையாளர் கடுவெல (Kaduwela) நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
பிரதான சந்தேகநபரான துலான் சஞ்சய் சார்பில் இன்றையதினம் (22) முன்னிலையான சட்டதரணி நுவான் ஜயவர்தன, தனது கட்சிக்காரர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கவுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இரகசிய வாக்குமூலம்
இதனையடுத்து, நீதவான் சனிமா விஜேபண்டாரவிடம், சந்தேகநபர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதுடன், அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க சம்மதித்தால், பிற்பகல் இடைவேளையின் பின்னர் சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தின் பகல் இடைவேளையின் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர் இது தொடர்பான இரகசிய வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், துலான் சஞ்சய் உள்ளிட்ட 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |