இலங்கையின் பிரபல சுற்றுலாத்தலம்: உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம்
இலங்கையின் நக்கிள்ஸ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுற்றாடல் குழு கூட்டத்திலேயே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
சுற்றுசூழல் உணர்திறன் வலயத்தின் ஊடாக உயர் அழுத்த மின் அமைப்புகள் இழுக்கப்படுவதால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு
இரத்தோட்ட பிரதேசத்தில் இருந்து றிவஸ்டன் ஊடாக ஏறக்குறைய மூன்று கிலோமீற்றர் தூரத்தை வரைய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் இதன் ஊடாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு மாற்றாக நிலத்தடி மின் வயரிங் செய்து, அதற்கான செலவு தொகையை பசுமை காலநிலை நிதியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.