கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு...பெப்ரவரியில் விசாரணை

Sri Lanka Police Missing Persons Mullaitivu
By Sathangani Dec 12, 2024 10:34 AM GMT
Report

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளதாக சட்டத்தரணி கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு (Mullaitivu) நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் (12.12.2024) மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் காணாமல்போனோர் அலுவலகம் (OMP) சார்பில் அலுவலகத்தின் சட்டத்தரணி, குறித்த அலுவலகத்தின் கிளிநொச்சி , முல்லைத்தீவு பிராந்திய இணைப்பாளர் கிருஷாந்தி ரத்நாயக்க, சட்ட வைத்திய அதிகாரி சார்பாக மருத்துவ அதிகாரி, மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கணபதிப்பிள்ளை கணேஸ்வரன், அனித்தா சிவனேஸ்வரன், கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கைதி

யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கைதி

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம்

இன்றைய வழக்கின் பின்னர் சட்டத்தரணி கணபதிப்பிள்ளை கணேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ”கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான AR 804/23 வழக்கானது இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு...பெப்ரவரியில் விசாரணை | Kokkuttoduwai Human Grave Case Hearing In February

இதன்போது சட்ட வைத்திய அதிகாரி சார்பாக இன்றையதினம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்றும் இன்னும் இரண்டு மாத கால அவகாசம் வேண்டும் என்ற அடிப்படையில் மன்றில் திகதியினை கோரியிருந்தனர்.

அதன் அடிப்படையில் மன்றானது சட்ட அதிகாரியின் விண்ணப்பத்தினை ஏற்று குறித்த வழக்கானது மீண்டும் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது.

நாடாளுமன்றம் செல்லும் மனோ : வெளியான சஜித் அணியின் தேசிய பட்டியல்

நாடாளுமன்றம் செல்லும் மனோ : வெளியான சஜித் அணியின் தேசிய பட்டியல்

கடந்த வழக்கு

இதற்கு முன்னர் இடம்பெற்ற கடந்த வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்ட வைத்திய நிபுணர் கனகசபாபதி வாசுதேவ, 

”இதுவரை காலமும் மனித புதைகுழியில் இருந்தும் மற்றும் மனித எலும்பு கூட்டு தொகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட இலக்கத்தகடு சம்பந்தமான முழு விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வழக்கு...பெப்ரவரியில் விசாரணை | Kokkuttoduwai Human Grave Case Hearing In February

அகழ்வில் ஈடுபட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 20 வரையான எலும்புக்கூடுகள் முற்றாக பகுப்பாய்வுக்கு உட்பட்ட நிலையில் மிகுதி எலும்புக்கூடுகள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன“ என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இல்லாமல் ஆக்கப்பட்ட முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் : டக்ளஸ் மீது வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்

இல்லாமல் ஆக்கப்பட்ட முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் : டக்ளஸ் மீது வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016