சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி நிறுத்தம் : வெளியான அறிவிப்பு
673,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அச்சு இயந்திரங்கள் மற்றும் வெற்று அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக்குழுவில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வாகன இலக்கத் தகடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது கையிருப்பில் உள்ள பத்து இலட்சம் அட்டைகள் ஜனவரி மாதத்திற்குள் தீர்ந்துவிடும், புதிய விநியோக ஒப்பந்தத்தின் கீழ் இருபது இலட்சம் அட்டைகளைக் கொண்ட முதல் தொகுதி அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் வந்து சேரும்.

இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, தற்போதுள்ள விநியோகஸ்தரிடமிருந்து மேலும் 500,000 அட்டைகளைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற முன்மொழிந்துள்ளோம்.
நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான சிக்கல்கள் அடுத்த ஆண்டு பாதியளவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வாகன இலக்கத் தகடுகளின் பற்றாக்குறை காரணமாக, சுமார் 450,000 வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளன.” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |