திடீர் மின்தடை குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
முதலாம் இணைப்பு
இலங்கை முழுவதும் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை விரைவாக மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மேல் கொத்மலை நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் மின்சார விநியோகத்தை விரைவாக வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு
இலங்கையின் பல பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், மின்வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் அதன் தாக்கம் குறித்த முழுமையான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
திடீர் மின்வெட்டு
மின்வெட்டுக்கான காரணம் மற்றும் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் நேரம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |