காவல்துறை சான்றிதழ் கோருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
காவல்துறை சான்றிதழ் (Police Clearance Certificates) அறிக்கைகளைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழி தரவு முறைமையில் (Online Data System) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு முற்றாகச் சீர்செய்யப்பட்டு அமைப்பில் விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காவல்துறை திணைக்களம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விண்ணப்பதாரர்கள் தற்காலிகமாக காவல்துறை சான்றிதழ் அறிக்கைகளைப் பெறுவதில் தாமதங்களும் சிரமங்களும் ஏற்பட்டிருந்தன.
தொழில்நுட்பக் கோளாறுகள்
இந்தநிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு 2026 அக்டோபர் 16 ஆம் திகதி முதல் இணையவழி மூலம் மீண்டும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இலங்கை காவல்துறை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.police.lk ஊடாகத் தங்கள் விண்ணப்பங்களை வழமை போல் சமர்ப்பிக்க முடியும்.
வெளிநாட்டுப் பயணம், வேலைவாய்ப்பு மற்றும் பிற நிர்வாகத் தேவைகளுக்காகப் காவல்துறை சான்றிதழ்களை எதிர்நோக்கியிருந்த பொதுமக்கள், தற்போது எவ்வித தடையுமின்றி இணையவழி நுழைவாயில் (Online Portal) ஊடாகப் பணிகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |