பிரகீத் எக்னெலிகொடவுடன் நெருங்கிய உறவு: முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் நீதிமன்றில் சாட்சி
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் உயர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் போன எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்தச் சாட்சி பதிவு செய்யப்பட்டது.
குறித்த சாட்சியமானது நேற்று (16.10.2026) பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சகோதர உறவு
முரளி என அழைக்கப்படும் சுமதிபால சுரேஷ் குமார் என்ற சாட்சியாளர், விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்த காலத்தில் எக்னெலிகொடவுடன் சகோதர உறவைப் பேணி வந்ததாகவும், இந்த உறவு குறித்து இயக்கத்தின் மூத்த தலைவர்களிடம் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயணித்த விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதன் மூலம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எக்னெலிகொட கூறியதாகவும் சாட்சியமளித்தார்.
எனினும், இந்தக் கருத்து போருக்குப் பின்னரான அரசியல் மாற்றங்கள் குறித்த கற்பனையான உரையாடலின்போது தெரிவிக்கப்பட்டதாக அவர் நீதிமன்றில் விளக்கமளித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |