நாமலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இரவிரவாக நடந்த சோதனை! மீட்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி

SLPP Namal Rajapaksa Bribery Commission Sri Lanka
By Sathangani Oct 17, 2026 06:54 AM GMT
Report

புதிய இணைப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் வீட்டில் காணப்பட்ட பாதுகாப்புப் பெட்டியொன்று, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள குறித்த வீட்டில், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோது, வீட்டில் காணப்பட்ட பாதுகாப்புப் பெட்டியை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், குறித்த பாதுகாப்புப் பெட்டியில் என்ன இருந்தது என்பது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இரவிரவாக நடந்த சோதனை! மீட்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி | A Raid At The House Of Namal S Private Secretary

முதலாம் இணைப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சஞ்சய் சமரசிங்கவின் கல்கிஸ்ஸையில் அமைந்துள்ள வீட்டில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப் படையினர் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை பண மோசடி விசாரணை விவகாரம்: காவல் அதிகாரியின் வாகனம் பறிமுதல்

மாத்தறை பண மோசடி விசாரணை விவகாரம்: காவல் அதிகாரியின் வாகனம் பறிமுதல்

சோதனை நடவடிக்கை 

நேற்று (16) இரவு சுமார் 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சோதனை, இன்று (17) அதிகாலை சுமார் 4.30 மணி வரை நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாமலின் பிரத்தியேக செயலாளரின் வீட்டில் இரவிரவாக நடந்த சோதனை! மீட்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டி | A Raid At The House Of Namal S Private Secretary

இதன்போது, அதிகாரிகள் வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சோதனையிட்டதுடன், வாக்குமூலங்களையும் பதிவு செய்ததாக மனோஜ் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதற்கான காரணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரை உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று பகல் வெளியாகலாம் எனவும் சட்டத்தரணி மனோஜ் கமகே மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016