இலங்கை வாழ் மக்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் அறிவிப்பு
புதிய இணைப்பு
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக நீர் விநியோகச் சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு சபை தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் திடீர் மின்தடை ஏற்பட்டதை தொடர்ந்து பல பகுதிகளில் நீர்விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கம்பஹா உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த நீர் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இன்று (17.10.2026) காலை சுமார் 11.45 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
நீர் விநியோகத்தடை
இதனைத் தொடர்ந்து, தற்போது நீர் விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால் நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் நிலையில், நீர் விநியோகமும் படிப்படியாகச் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |