கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை

India World Doctors
By Shalini Balachandran Aug 17, 2024 08:01 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in இந்தியா
Report

கொல்கத்தாவில் (Kolkata) உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் கருத்தரங்கு அறையில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கடந்த ஓகஸ்ட் ஒன்பதாம் ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு உதவிய பெண் ரஷ்ய நடன கலைஞர் : 12 ஆண்டுகள் சிறையில் அடைப்பு

உக்ரைனுக்கு உதவிய பெண் ரஷ்ய நடன கலைஞர் : 12 ஆண்டுகள் சிறையில் அடைப்பு

ஆதாரங்களின் அடிப்படை

இந்த சம்பவம் நள்ளிரவு மூன்று மணியில் இருந்து அதிகாலை ஆறு மணிக்குள் நடந்திருப்பதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், கொல்கத்தாவில் போக்குவரத்து காவல் தன்னார்வலராக பணியாற்றி வரும் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்திருந்தனர்.

இந்த நபர் கைது செய்யப்பட்ட இடத்தில் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை | Kolkata Doctor Case Full Story  

பெண் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்ட அறையில் உடைந்து போன புளூடூத் இயர்போன் கிடைத்திருந்த நிலையில் அது குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் தொலைபேசியுடன் இணைக்கப்பட்டிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்தோடு, அதிகாலை நான்கு மணிக்கு அந்த நபர் மருத்துவமனை கட்டடத்திற்குள் நுழைவதும் சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன் அப்போது அவர் காதில் இயர்போன் அணிந்திருக்கிறார்.  

4 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படம்: வெளியான பட்டியல்

4 தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படம்: வெளியான பட்டியல்

வெடித்துள்ள போராட்டங்கள்

ஆனால் 40 நிமிடங்கள் கழித்து அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது காதில் இயர்போன் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் உடற்கூராய்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பெண் மருத்துவரின் கொலை | Kolkata Doctor Case Full Story  

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளானது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஆர்.ஜி கர் மருத்துவமனையின் தலைவராக இருந்த சந்திப் கோஸ் தனது பதவி விலகியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்கு நீதி கோரி மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

காசாவில் தொடரும் மனித அவலம்..! 25 வருடங்களின் பின் 10 மாதக் குழந்தைக்கு இனங்காணப்பட்ட நோய்

காசாவில் தொடரும் மனித அவலம்..! 25 வருடங்களின் பின் 10 மாதக் குழந்தைக்கு இனங்காணப்பட்ட நோய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025